வெள்ளி, மார்ச் 02, 2012

பாண்டிய மன்னனுக்கு பிழை தெரியுமா? தெரியாதா??...



"என் கருத்துக்களை அப்படியே (பிழை தெரியாமலும்/ பிழை பொருத்தும்) ஏற்றுக்கொள்ளும் "பாண்டிய மன்னர்களுக்கும்", அதில் உள்ள குறைகளை சுட்டிக் காட்டும் "நக்கீரர்களுக்கும்" என் நன்றியை முன்கூட்டியே தெரிவித்துக் கொள்கிறேன்". 

        இது என்னுடைய வலைப்பதிவின் விளக்கமாய், வலைப்பதிவின் பெயரின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள வாக்கியம். இதை எழுதும் போது, இதில் உள்ள ஒரு புதுமையான செய்தி எனக்கு தெரிய வந்தது; அது ஒரு புதிய "பட்டிமன்ற/ பட்டிமண்டப" தலைப்பாய் உபயோகிக்கலாம். என்னறிவுக்கு எட்டிய வரையில், அந்த மாதிரி தலைப்பில் பட்டிமன்றமோ/ பட்டிமண்டபமோ நடந்திருப்பதாய் தெரியவில்லை. அவ்வாறு எவருக்கு தெரிந்திருப்பின்/ தெரியவரின் எனக்கு தெரிவிக்க வேண்டுகிறேன்; அது என் தவறான கருத்தை மாற்றிக்கொள்ள உதவும். மேற்கூறிய விளக்கம், சிவனின் "திருவிளையாடல்" கதையை ஒன்றி வந்தது என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கும். அதில் வரும் சிவனின் வாதமான "பெண்களுக்கு இயற்கையிலேயே கூந்தலில் மனமுண்டா, இல்லையா?" என்பதின் அடிப்படியில் கூட வாதம் செய்து கேட்டிருக்கிறேன். தருமிக்கு சிவன் அப்பரிசை பெற்றுத்தந்தது சரியா, தவறா என்ற அடிப்படையில் கூட வாதம் நடந்திருக்கிறது. நக்கீரன்-ஐ பற்றி சொல்லவே வேண்டாம்; அவரைப் பற்றி பலவித வாதங்கள் நடந்திருக்கிறது.

         இந்தப்புது விளக்கத்தை எண்ணிப்பார்க்கையில், நம் செம்மொழியாம் "தமிழ்" எத்துனை வலிமையானது என்று மேலும் உறுதியாய் எண்ணத் தோன்றியது. ஒரு சிறு வார்த்தை மாற்றத்தைக் கொண்டு தமிழில், எத்துனை பெரிய வித்தியாசம் அதன் பொருளில் தோற்றுவிக்கக்கூடும் என்பதற்கு எண்ணற்ற உதாரணங்கள் உள்ளன. இதுவும், அப்படிப்பட்ட ஒன்று தான்; ஒரு கவித்துவத்திற்கு தான் முதலில் அடைப்புக்குறிக்குள் இருக்கும் அந்த வார்த்தைகளை வைத்தேன். அதன் பொருள், உண்மையில், அந்த விளக்கத்தை உண்டாக்கும் போது எனக்கு விளங்கவில்லை. அதுதான், நம்மொழியின் தனிச் சிறப்பு; அதனால் தான், வள்ளுவப்பெருந்தகை வெறும் "ஏழு வார்த்தை"களைக் கொண்டு 1330 குறள்-களை எழுத முடிந்தது. வள்ளுவர் கூறாத ஒன்றைக் கூட (எது சம்மந்தமாயினும்) திருக்குறளில் இல்லையென சுட்டிக்காட்ட முடியாது! எங்கனம் முடிந்தது அப்படி செய்ய, அதும் வெறும் ஏழு வார்த்தைகளைக் கொண்டு? அது தான், நம் செம்மொழியின் சொல்வன்மை. அதை உபயோகிப்பவர் திறமையில் உள்ளது; அதில் ஆயிரமாயிரம் அர்த்தங்களை கொண்டு வருவது.        

         சரி, திருவிளையாடலில் வரும் அக்கதையின் அடிப்படையில் பார்க்கும்போது, அதில் சம்மந்தப்பட்ட பாண்டிய மன்னனுக்கு தமிழ்ப்புலமை மிகுந்து இருந்தது தெரியவருகிறது. அவரின் தமிழ்ப்புலமையை எடுத்துரைக்கும் வகையிலும் சில காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. எனவே, பாண்டிய மன்னனுக்கு தமிழ்ப்புலமை இருந்தது என்பதை எவரும் மறுக்கமுடியாது. சரி, ஒரு முறை "பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மனம் உண்டா, இல்லையா?" என்ற சந்தேகம் வர, அவர் அதை தீர்க்கும் புலவருக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசு என்று அறிவிக்கிறார். அதையறிந்து, "தருமி" என்னும் வறுமையில் வாடும் புலவன் அதைப் பெற கடவுளிடம் முறையிடும்போது, சிவன் வந்து உதவுகிறார். அப்போது, அவர் மன்னனின் சந்தேகம் தீர்க்கும் பாடலை இயற்றி தருமியுடன் கொடுத்து, பாண்டிய மன்னன் பரிசு வழங்க ஆயத்தமாகும் வரை செல்கிறது. அப்போது தான், நக்கீரன் அப்பாடலில் "பொருட்குற்றம்" உள்ளதை கண்டறிந்து, பரிசு கொடுப்பதை தவறு செய்கிறார். பின், சிவன் வந்து நக்கீரனின் தமிழ்ப்புலமையுடன் விளையாடி, அவர் புகழை உலகறிய செய்யத்தான் அத்திருவிளையாடல் என்று கூறி முடிக்கிறார்.

                   சரி, இப்போது தான் என் சிந்தனையில் அந்த கேள்வி எழுகிறது! அது, தமிழ்ப்புலமை  கொண்ட பாண்டிய மன்னர் ஏன் பரிசளிக்க ஆணை பிறப்பித்தார்? அவரின் தமிழ்ப்புலமை எங்கே போனது?? அல்லது ஏன் அது மறைக்கடிக்க/ மறைக்க பட்டது??? உண்மையில், அவர் பொருட்குற்றம் உணராமல், அவசரப்பட்டு பரிசளிக்க ஆணையிட்டரா? அப்படியாயின் அவரின் தமிழ்ப் புலமை சந்தேகத்துக்குரியதாய் ஆகிவிடும்; இருக்கக்கூடும், மன்னனுக்கு அனைத்தும் தெரிந்திருக்கவேண்டிய அவசியம் இல்லைதான்; மேலும், அதற்காகத்தான் "புலவர் சபை" இருந்திருக்கக் கூடும். இதை அரசனாய் இருந்து பார்க்கையில், அரசனின் கடமையை கருத்தில் கொண்டு ஒரு ஏழைக் குடிமகனுக்கு உதவியாய் இருக்க வேண்டிக் கூட "அந்த சிறு" தவறையுணர்ந்தும் , அதைப் பொருட்படுத்தாமல் அந்த தவறை மன்னித்து ஆணைப் பிறப்பித்திருக்க சாத்தியம் உண்டு தானே? இதில், எது உண்மை?? இதை எவர் எடுத்துரைப்பது??? அதனால் தான், இது (இதுவரை உண்மையில் இல்லை எனின்) ஒரு புதிய விவாத தலைப்பாய் ஆகக்கூடும் என்றுரைத்தேன். ஒருவேளை, இதையும் சிவன் வேண்டுமென்றே (வெளியில் சொல்லாமல்) தன் திருவிளையாடல்களில் ஒன்றாய் சொல்லாமல், விட்டுவிட்டாரோ? அதை நாமே உணரவேண்டும் என்று ஒதுக்கிவிட்டாரோ?? அது அந்த சிவனுக்கே வெளிச்சம்.

          குறிப்பு: எல்லாம் வல்ல சிவனுக்கும், எல்லாம் தெரிந்த தமிழரிஞற்கும் ஒரு வேண்டுகோள்! இத்தலையங்கத்தில், ஏதேனும் "பொருட்குற்றம்" இருப்பின் தண்டனையின்றி சுட்டிக்காட்டுங்கள். என் தவறைத் திருத்திக் கொள்கிறேன்.

3 கருத்துகள்:

  1. சரி, இப்போது தான் என் சிந்தனையில் அந்த கேள்வி எழுகிறது! அது, தமிழ்ப்புலமை கொண்ட பாண்டிய மன்னர் ஏன் பரிசளிக்க ஆணை பிறப்பித்தார்? அவரின் தமிழ்ப்புலமை எங்கே போனது?? அல்லது ஏன் அது மறைக்கடிக்க/ மறைக்க பட்டது??? உண்மையில், அவர் பொருட்குற்றம் உணராமல், அவசரப்பட்டு பரிசளிக்க ஆணையிட்டரா? அப்படியாயின் அவரின் தமிழ்ப் புலமை சந்தேகத்துக்குரியதாய் ஆகிவிடும்; இருக்கக்கூடும், மன்னனுக்கு அனைத்தும் தெரிந்திருக்கவேண்டிய அவசியம் இல்லைதான்; மேலும், அதற்காகத்தான் "புலவர் சபை" இருந்திருக்கக் கூடும். இதை அரசனாய் இருந்து பார்க்கையில், அரசனின் கடமையை கருத்தில் கொண்டு ஒரு ஏழைக் குடிமகனுக்கு உதவியாய் இருக்க வேண்டிக் கூட "அந்த சிறு" தவறையுணர்ந்தும் , அதைப் பொருட்படுத்தாமல் அந்த தவறை மன்னித்து ஆணைப் பிறப்பித்திருக்க சாத்தியம் உண்டு தானே? இதில், எது உண்மை??

    இதை அரசனாய் இருந்து பார்க்கையில், அரசனின் கடமையை கருத்தில் கொண்டு ஒரு ஏழைக் குடிமகனுக்கு உதவியாய் இருக்க வேண்டிக் கூட "அந்த சிறு" தவறையுணர்ந்தும் , அதைப் பொருட்படுத்தாமல் அந்த தவறை மன்னித்து ஆணைப் பிறப்பித்திருக்க சாத்தியம் உண்டு என்பதே என் கருத்து. பட்டி மன்றம் வைத்து பாண்டிய மன்னனின் தமிழ் புலமையை வெளிபடுத்தி பின் இந்த தீர்ப்பை கூறினால் இன்னும் நன்றாக இருக்கும் என்பது ஏற்றுக்கொள்ள கூடியது.

    பதிலளிநீக்கு
  2. ஆனந்த்,

    உங்களின் கருத்தை ஆதறி க்கிறேன்! ஆனால், ஏன் இது பற்றி எவரும் (எனக்கு தெரிந்த அளவில்) விவாதிக்கவில்லை என்பது தெரியவில்லை!! உங்களைப் போல், பலரும் இந்த கோணத்தில் - இந்த நிகழ்வை அனுகவேண்டும் என்பதே என் எண்ணம்!!!

    பதிலளிநீக்கு
  3. Arasanin kelvikku avan Eathirpaththa pathil kedaithathinal avan porul kuttraththai parkavillai endru neenaikeren.

    பதிலளிநீக்கு